Skip to main content

Super Tamils

மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை திரைப்படம் உலகையே கலக்கியது…!வசூலில் புதிய உச்சம்.

வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த Biopic திரைப்படமாக உலகளவில் 977 மில்லியன் டொலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘மைக்கல்’.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இதன் மூலம், உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி சாதனை படைத்த ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தின் வசூல் சாதனையை இந்தப் படம் அதிகாரப்பூர்வமாகத் தகர்த்தெறிந்துள்ளது. இதற்கு முன்பாகவே ‘பொஹிமியன் ரெப்சோடி’ படத்தின் சாதனையை முறியடித்து, உலக அளவில் அதிக வசூலை வாரிக் குவித்த இசை சார்ந்த திரைப்படமாக (Musical) உருவெடுத்திருந்த ‘மைக்கல்’, தற்போது ஒட்டுமொத்த பயோபிக் திரைப்படங்களின் வரிசையிலேயே முதலிடத்தைப் பிடித்து அரியணை ஏறியுள்ளது. அதுமட்டுமன்றி, பிரபல லயன்ஸ் கேட் (Lionsgate) தயாரிப்பு நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான, அதிக லாபம் ஈட்டிய திரைப்படமாகவும் இது மாறியிருக்கிறது.

இயக்குநர் அந்துவான் ஃபுகுவாவின் நேர்த்தியான இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், மைக்கல் ஜெக்சனின் கதாபாத்திரத்தில் அவருடைய சொந்த மருமகனான ஜாபர் ஜெக்சன் நடித்திருக்கிறார். அவரது அச்சு அசலான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடம் இந்தப் படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், விமர்சகர்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. மைக்கல் ஜெக்சன் மீது சுமத்தப்பட்ட சர்ச்சைமிக்க குற்றச்சாட்டுகளைப் பற்றிப் பேசத் தவறி, உண்மைகளை மூடிமறைத்து ஒரு சுத்திகரிக்கப்பட்ட கதையாக (Whitewashed version) இதனை எடுத்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இருப்பினும், இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது முதல் ஒட்டுமொத்த உலகையுமே மீண்டும் தன் வசப்படுத்தியுள்ளார் மைக்கல் ஜெக்சன். இதன் எதிரொலியாக, உலகளாவிய ரீதியில் ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப் போன்ற முன்னணி இசைத்தளங்களில் அவருடைய பாடல்களைத் தேடித் தேடிக் கேட்போரின் எண்ணிக்கையும், அவரது வீடியோக்களைப் பார்ப்போரின் எண்ணிக்கையும் தற்போது ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Michael Jackson’s biographical film, ‘Michael,’ directed by Antoine Fuqua and starring Jackson’s nephew Jaafar Jackson, has made history by grossing $977 million globally, becoming the highest-grossing biopic of all time after surpassing Christopher Nolan’s ‘Oppenheimer.’ While the Lionsgate production has emerged as a massive commercial success and re-ignited a global surge in streams for Jackson’s music on Spotify and YouTube, it has also drawn stark criticism from movie critics who accuse the film of being a whitewashed narrative that deliberately overlooks the controversial allegations faced by the pop icon.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்