Skip to main content

Super Tamils

17 வயது தவில் கலைஞரின் திடீர் மரணம்…!யாழில் பெரும் சோகம்.

யாழில் தவறான முடிவெடுத்து இளம் தவில் கலைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு, இராசபாதை வீதியைச் சேர்ந்த பிரசாந் சச்சின் என்ற 17 வயது இளைஞரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டவராவார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது, இந்த இளம் கலைஞர் நேற்று புங்குடுதீவு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த தவில் கச்சேரியில் வாசித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

திடீர் மரண விசாரணை அதன் பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் தவில் கச்சேரி ஒன்று இருந்தபோதிலும், அவர் அங்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு அவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். இவருடைய சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் அவர்கள் மேற்கொண்டார்.

தனது 8 வது வயதிலேயே தவில் வாசிக்கத் தொடங்கி, தற்போது 17 வயதாகும் இந்த இளம் கலைஞர், தனது அசாத்திய கலைத் திறமையால் பலருடைய நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

A talented 17-year-old Thavil artist named Prasanth Sachin from Koppay North, Jaffna, tragically passed away by suicide. The young musician, who had been performing since the age of eight and was well-loved for his musical talent, took this extreme step after returning from a temple performance in Pungudutivu and failing to attend his next scheduled event in Achchuveli. The sudden death inquiry was conducted by the Inquirer into Sudden Deaths, Namasivayam Premathasan.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்