காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் பலத்த காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குறிப்பிட்ட இந்த கடல் பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், கற்பிட்டியிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை உயரமாக எழும்ப வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீனவர்களும் கடற்படையினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்து வெளியிடும் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
The Department of Meteorology has issued an amber warning for the sea areas stretching from Galle to Potuvil via Hambantota due to strong winds, high waves, and rough sea conditions. Fishermen and naval communities are advised to remain highly vigilant and continuously monitor upcoming weather updates, as wind speeds could reach up to 60 km/h and wave heights may rise up to 2.5 meters.