யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் 18ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, சிறுவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு எலும்புக்கூடுகள் உட்பட மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது, புதிதாக மேலும் 6 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மண்ணுக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஏற்கனவே கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளில் இருந்து, சிறுவர்களுடையது என நம்பப்படும் 2 எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 8 தொகுதிகள் நேற்றைய தினம் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளில் ஒட்டுமொத்தமாக 302 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 298 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இதுவரை முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாகவே செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியில் இருந்து, சிறுவர்களுடையதாக இருக்கலாம் என்று கருதப்படும் எலும்புக்கூடுகள் அடுத்தடுத்து தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
During the 18th day of the third phase of excavations at the Semmani human mass grave in Jaffna, eight more skeletal remains, including two suspected to be of children, were fully exhumed on Sunday. Additionally, six new skeletal remains were discovered yesterday. To date, a total of 302 skeletal remains have been uncovered at the site, with 298 of them fully excavated, highlighting a concerning trend of continuous recoveries of suspected children’s remains over the past few days.