கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள லோயலிஸ்ட் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வந்த லக்ஷா என்ற இளம்பெண், தனது வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது தனது தாய்க்கு தொலைபேசியில் அழைத்த லக்ஷா, “அம்மா, வீட்டில் தீப்பிடித்து எரிகிறது, கதவுப் பகுதியையும் தீ சூழ்ந்துவிட்டதால் என்னால் வெளியே வர முடியவில்லை, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறியுள்ளார். மகளின் அபயக்குரலைக் கேட்டு பதறியடித்துக்கொண்டு தாய் விரைந்து வந்தபோதிலும், அதற்குள் லக்ஷா தீயில் கருகி உயிரிழந்திருந்தார்.
இந்தத் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
_________________________________________________________________________________________
A young woman named Laksha tragically lost her life in a house fire in Loyalist Township, Ontario, Canada. In a heartbreaking final phone call, she pleaded with her mother for help, stating she was trapped as flames blocked her exit; unfortunately, she had already passed away by the time help arrived, and an investigation into the cause of the fire is currently underway.