திருகோணமலை, கந்தளாய் ரஜஎல பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டு வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் இணைந்து தீயை அணைக்கப் போராடிய போதிலும், தீ மளமளவெனப் பரவியதால் கார் முழுமையாகச் சேதமடைந்தது.
இந்தத் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. யாராவது திட்டமிட்டு காருக்குத் தீ வைத்தார்களா அல்லது மின்கசிவு போன்ற தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து நேரிட்டதா என்ற இருவேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தற்போது கந்தளாய் காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மேலதிக ஆதாரங்களைத் திரட்டுவதற்காகத் தடயவியல் நிபுணர்களின் உதவியையும் நாடத் திட்டமிட்டுள்ளனர்.
_____________________________________________________________________________________
A car parked at a residence in Raja Ela, Kantale, was completely destroyed after catching fire early Sunday morning. Police are currently investigating whether the incident was an act of arson or caused by a technical fault like an electrical short circuit, with plans to involve forensic experts for further clarity.