கண்டி நகரில் விசா ஆலோசனை மையம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள், அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடி செய்துள்ளனர். கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 35 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கித் தராதது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த முறைப்பாட்டை அடுத்து, அதிகாரிகள் அந்த நிறுவனத்தை அதிரடியாகச் சோதனையிட்டனர். அப்போது, அந்த நிறுவனம் பணியகத்தின் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 7 வேலை ஒப்பந்தங்கள், 5 கடவுச்சீட்டுகள் மற்றும் பணப் பற்றுச்சீட்டு புத்தகங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட கம்பளை மற்றும் தலாத்துஓயா பிரதேசங்களைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
_____________________________________________________________________________________
Two 23-year-old men were arrested in Kandy for operating an unlicensed visa consultancy and defrauding a job seeker of 35 lakh rupees by promising employment in Australia. During a raid, authorities seized passports and forged job contracts, and the suspects are now set to appear before the Kandy Magistrate’s Court.