பிரித்தானியாவில் ஆட்கடத்தல் கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, பிரான்ஸ் நாட்டினால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவரும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்த இலங்கையர், பிரான்ஸில் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடூரமான குற்றத்திற்காக அந்நாட்டுப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொலிஸான இன்டர்போல் (Interpol) வரலாற்றிலேயே ஆட்கடத்தலை ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் வேட்டையின் போது இவர்கள் அனைவரும் பிடிபட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த இலங்கையர் உட்பட ஏழு பேரையும், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு நாடுகடத்துவதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளைப் பிரித்தானிய அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
_________________________________________________________________________________________________
British authorities have arrested seven individuals involved in human trafficking, including a Sri Lankan Tamil man wanted by French officials for the sexual abuse of a minor. The arrests were part of one of the largest global operations in Interpol’s history targeting human trafficking networks. Legal proceedings are currently underway to extradite the seven suspects to face charges in their respective jurisdictions.