Skip to main content

Super Tamils

தோழியுடன் உறவு: தட்டிக்கேட்ட கணவனுக்கு கொடூர தாக்குதல்

உத்தர பிரதேசத்தில் பெண் தோழியுடனான ஓரினச் சேர்க்கை காதலை கண்டித்த விவசாயியை, கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரினச் சேர்க்கை.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம், திகார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுமர் சிங் (45). இவரது மனைவி ரேணு தேவி (35). இவர்களின் அண்டை வீட்டில் வசித்து வருபவர் மாலதி தேவி (37). கணவரை இழந்த மாலதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ரேணு தேவிக்கும் மாலதி தேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது ஓரினச் சேர்க்கை காதலாக மாறியுள்ளது.

தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதமாக, ரேணுவின் பெயரை மாலதி தனது கையில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் கணவர் சுமர் சிங்கிற்குத் தெரியவந்ததும், அவர் மாலதி தேவியை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளார். அத்துடன் தனது மனைவியைக் கடுமையாகக் கண்டித்து, அந்தத் தொடர்பைக் கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரேணுவும் மாலதியும், தங்கள் காதலுக்குத் தடையாக இருக்கும் சுமர் சிங்கைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். இதற்காக 60 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கூலிப்படையை அமர்த்தி, முன்பணமாக 8 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, மாலதி கொடுத்த ரகசிய செல்போன் மூலமே இருவரும் இந்தத் திட்டத்தைப் பரிமாறி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று சுமர் சிங் வயலுக்குச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த கூலிப்படையினர் துணியால் அவரது கழுத்தை நெரித்தும், கத்தியால் அறுத்தும் கொடூரமான முறையில் கொலை செய்தனர். வயல்வெளியில் சடலமாகக் கிடந்த சுமர் சிங்கின் மரணம் குறித்துப் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், மனைவி மற்றும் அவரது தோழியின் இந்தத் திட்டமிட்ட நாடகம் அம்பலமானது.

______________________________________________________________________________________

In a shocking incident in Uttar Pradesh, a farmer named Sumar Singh was murdered by a hitman hired by his wife and her female partner. The motive stemmed from the victim’s opposition to the women’s same-sex relationship and his attempts to bar the partner from their home; police uncovered the plot after investigating the farmer’s brutal death in his fields.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *