Skip to main content

Super Tamils

கிருலப்பனையில் ரூ.2 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது…! ‘களுபோவில அவிஷ்க’வின் சகா எனத் தகவல்.

போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒழுங்கமைக்கப்பட் குற்றக்குழு உறுப்பினரும் ‘கொஸ் மல்லி’ என்பவரின் போதைப்பொருள் நடவடிக்கைகளை நிர்வகிப்பதாகக் கூறப்படும் ‘களுபோவில அவிஷ்க’வின் சகா ஒருவர் கிருலப்பனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

காவல்துறை விசேட அதிரடிப்படையின் விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் இந்த நபர் சிக்கினார்.

சிக்கிய சந்தேகநபரிடம் இருந்து சுமார் இரண்டு கிலோ பத்து கிராம் ஐஸ் போதைப்பொருளும், ஐந்நூற்றி நான்கு கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு டிஜிட்டல் தராசு, இரண்டு ரப்பர் முத்திரைகள் மற்றும் இரண்டு செல்போன்களும் சிக்கின.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு கிட்டதட்ட இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்த நபரும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் அடுத்த கட்ட விசாரணைகளுக்காக இப்போது போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படை தரப்பு கூறியுள்ளது.

An associate linked to drug dealer “Kos Malli” and “Kalubowila Avishka” was arrested in Kirulapone by the Special Task Force, who seized over 2 kg of Ice, 504g of heroin, and other items worth approximately 20 million rupees.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்