Skip to main content

Super Tamils

முதல் நாளில் ரூ.6.80 கோடி வசூலித்த ‘சர்தார் 2’…! கார்த்தி படத்திற்குக் கிடைத்த ஓப்பனிங்.

கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான சர்தார் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2022-ல் வந்த சர்தார் செம ஹிட்டானது. அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இப்போது சர்தார் 2 வந்துள்ளது.

இதில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு எனப் பட்டாளமே நடிச்சிருக்கு. சாம் சி.எஸ் மியூசிக் வேற லெவல்ல கைக்கொடுத்துள்ளது.

ரசிகர்களிடம் செம எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மூவிக்குத் தியேட்டர்களில் சூப்பரான வரவேற்பு கிடைச்சிட்டு வருது. இப்போ சர்தார் 2 படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியே வந்துள்ளது.

முதல் நாளில் உலகம் முழுவதும் இப்படம் ரூபாய் 8 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. இது படத்திற்கு கிடைத்துள்ள அருமையான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இனி வரும் நாள்களில் வசூல் எந்த அளவுக்குப் பிக்கப் ஆகும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Actor Karthi’s recently released film ‘Sardar 2’, directed by P.S. Mithran, has grossed 8 crore rupees worldwide on its opening day, receiving a strong response from fans.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்