Skip to main content

Super Tamils

பேருந்து நிலைய கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை…! நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு செல்ல முயன்றதாக 30 வயது பெண் மீது குற்றச்சாட்டு.

கேகாலை கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கேகாலை மாவட்டம் கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில் பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 30 வயதுடைய பெண் ஒருவரை நேற்று நண்பகல் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

அந்தப் பெண்மணி அன்றைய தினமே அக்குழந்தையைப் பெற்றெடுத்திருக்கலாம் என்று சந்திக்கப்படுகிறது.

சம்பவத்தன்று கழிவறைக்குள் பிறந்த குழந்தையை அங்கிருந்த நீர்த் தொட்டிக்குள் போட்டுவிட்டு தப்பியோட அவர் முயன்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தைக் கண்ணுற்ற பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணைப் பிடித்து காவல்துறையினரின் உதவியுடன் அவரையும் குழந்தையையும் சிகிச்சைக்காகக் கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

A newborn baby was found abandoned in a women’s public restroom at the Kegalle Karawanella bus stand. Alert citizens caught a 30-year-old woman suspected of trying to leave the infant in a water tank, and both the mother and the baby were subsequently admitted to the Karawanella Base Hospital, where the child is reported to be in good health.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்