Skip to main content

Super Tamils

இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை ஆரம்பம்…! முதல் Vietjet விமானத்தை இயக்கிய இரு இலங்கையர்கள்.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietjet Air Line), அதன் சேவையை ஆரம்பிக்கும் வகையில் முதல் விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே பயணிகளை இணைக்கும் இந்த புதிய விமான சேவை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சேவையைத் தொடங்கி வைக்கும் விதமாக வந்துள்ள முதல் விமானத்தின் தலைமை விமானி மற்றும் உதவி விமானி ஆகிய இருவரும் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, பாணந்துறையைச் சேர்ந்த திவங்க சில்வா மற்றும் மொரட்டுவையைச் சேர்ந்த ரந்தீர் பெரேரா ஆகிய இருவரும் இணைந்துதான் இந்த விமானத்தைச் வெற்றிகரமாக இயக்கி வந்துள்ளனர்.

வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படவுள்ள வியட்ஜெட் விமான சேவையின் VJ-1875 என்ற இலக்கமுடைய முதலாவது விமானம், நேற்று (18) இரவு 09.33 மணிக்கு 169 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது. அதன் பிறகு, அந்த விமானம் 171 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் வியட்நாமின் ஹோசிமின் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த நேரடி விமான சேவை எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை மிகவும் எளிதாக்கும் வகையில், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் வாரத்திற்கு 3 நாட்கள் வியட்நாமின் ஹோசிமின் நகர விமான நிலையத்திற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையே தொடர்ந்து இயக்கப்படவுள்ளது.

Low-cost carrier Vietjet has launched direct flights between Vietnam and Sri Lanka, with its inaugural flight piloted by Sri Lankans touching down at Bandaranaike International Airport carrying 169 passengers, marking the start of a thrice-weekly service.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்