Skip to main content

Super Tamils

மழை வேண்டி முதலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை…! பூசாரியின் விநோத வழிபாட்டால் வியந்த மக்கள்.

கிருஷ்ணா ஆறு பாய்ந்தோடுகிறது தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள பீச்சுப்பள்ளி புஷ்கர காட் பகுதியில்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இப்பகுதியில் போதிய பருவமழை பொய்த்துப் போய் கடுமையான வறட்சி வாட்டி வதைத்து வந்த நேரத்தில், நதிக்கரையின் ஓரத்தில் திடீரென்று ஒரு பெரிய முதலை கரைக்கு வந்து ரொம்ப அமைதியா ஓய்வெடுத்துட்டு இருந்துச்சு.

பொதுவாவே முதலையைக் கண்ணுல பார்த்தாலே எல்லாரும் பயந்து போய் ஓட்டம் பிடிப்பாங்க, ஆனா அங்கிருந்த பூசாரி மட்டும் ரொம்ப வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தார். நல்ல மழை பெய்யணும்னு நினைச்சு அந்த முதலைக்கு ஸ்பெஷல் பூஜை பண்ண முடிவு செஞ்ச அவர், கொஞ்சமும் பயமில்லாம அதுக்கு ரொம்பப் பக்கத்துல போனாரு. அந்த ஆபத்தான விலங்கோட நெற்றியில் மஞ்சள், குங்குமம் வச்சு, மலர்களைத் தூவி, தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி வறட்சி நீங்கி மழை பொழியணும்னு மனதார வேண்டிக்கிட்டார்.

பூசாரி பக்கத்துல போய் தொட்டு கும்பிட்டபோதும் கூட, அந்த முதலை எந்தவித கோபமும் காட்டாம ஒரு சாதுவான பிராணி மாதிரி ரொம்ப அமைதியா படுத்திருந்தது அங்க கூடிருந்த பக்தர்களையும் பொதுமக்களையும் ரொம்பவே ஆச்சரியப்படுத்துச்சு.

இந்த வித்தியாசமான வழிபாட்டைப் பார்க்க நதிக்கரையில் மக்கள் கூட்டம் குவழியத் தொடங்கிய நிலையில், விபரம் தெரிஞ்சு அந்த இடத்துக்கு வேகமா வந்த வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆபத்தைப் புரிஞ்சுக்காம விலங்குகளுக்கு அருகில் செல்வதைத் தடுத்து நிறுத்தினார்கள்.

கடைசியில் அந்த முதலையை எந்த விதமான பாதிப்பும் இல்லாம பத்திரமாக மீட்டு, கிருஷ்ணா ஆற்றின் ஆழமான பகுதிக்குள் கொண்டு போய் பாதுகாப்பாக விட்டனர். வறட்சி நீங்கி மழை பெய்யறதுக்காக முதலைக்கு மஞ்சள், குங்குமம் வச்சு பூசாரி விநோத பூஜை செஞ்ச இந்தச் சம்பவம் இப்போ சோஷியல் மீடியாவில் வைரலாகி ரொம்பப் பேசப்பட்டு வருது.

A priest in Telangana’s Jogulamba Gadwal district performed a special prayer by applying turmeric and kumkum to a massive crocodile that washed ashore amid a severe drought, praying for rain before wildlife officials safely rescued and returned the reptile to the Krishna River.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்