Skip to main content

Super Tamils

தாயின் சடலத்தை 3 ஆண்டுகள் ஃபிரீஸரில் மறைத்து £78,000 மோசடி…! மகனுக்கு 2 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறை.

பேராசை, எந்த அளவுக்குக் கொடூரமாக மாற்றும் மனிதர்களின் அடிப்படை உணர்வுகளையும் மனிதாபிமானத்தையும் என்பதற்கு இங்கிலாந்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு சம்பவம் உலகெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள போர்த்கால் நகரில், 89 வயது மூதாட்டி சில்வியா பிலிப்ஸ் தனது 60 வயது மகன் கிறிஸ்டோபர் பிலிப்ஸுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டில் சில்வியா மரணம் அடைந்துவிட்டார்.

வழக்கமாகப் பெற்றோர் இறந்ததும் இறுதிச் சடங்குகளைச் செய்து மரணத்தைப் பதிவு செய்வதுதான் வழக்கம். ஆனால், கிறிஸ்டோபர் தன் தாயின் மறைவை மூடிமறைத்து, வீட்டிலிருந்த ஃப்ரீசரில் உடலைப் பாதுகாப்பாக வைத்துப் பூட்டினார்.

அரசுக்குத் தாயார் உயிரோடு இருப்பதாகப் பொய் சொல்லி, அவரது ஓய்வூதியப் பணத்தை மட்டும் தொடர்ந்து தன் அக்கவுண்ட்டுக்கு மாற்றி மோசடி செய்தார். இப்படி மூன்று ஆண்டுகளில் சுமார் 78,000 பவுண்டுகள் வரை அரசிடம் முறைகேடாகப் பெற்று தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

தாய் எங்குமே வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகளும் போலீசாரும் நேரில் சென்று சோதனையிட்டனர். அப்போது மூன்று ஆண்டுகளாக உறைந்திருந்த சில்வியா பிலிப்ஸின் உடலைப் பார்த்து அனைவரும் உறைந்து போய்விட்டனர்.

உடனே கிறிஸ்டோபரை மடக்கிப் பிடித்த போலீசார், அரசுப் பண மோசடி மற்றும் இறுதிச் சடங்குகளைத் தடுத்தல் போன்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளியான கிறிஸ்டோபர் பிலிப்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

A Welsh man named Christopher Philips was sentenced to over two years in prison after hiding his 89-year-old mother’s death in a freezer for three years to illegally collect around £78,000 in her pension and government benefits.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்