Skip to main content

Super Tamils

சாதாரண குடும்பப் பெண்ணின் கணக்கில் ரூ.100 கோடி..! வங்கியே ஸ்தம்பித்த சம்பவம்.

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஏழைப் பெண்ணின் வங்கிக் கணக்கில் தோராயமாக நூறு கோடி ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கொல்கத்தாவில் தகரக் கொட்டகை மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த சிறிய வீட்டில்தான் கஷ்மிரா ஷா (36) வசித்து வருகிறார். கஷ்மிராவின் கணவர் சட்டை தைக்கும் தொழிலைச் செய்து வருகிறார்; அவருக்கு உறுதுணையாகப் புடவைகளில் எம்ப்ராய்டரி வேலை செய்யும் பணியையும் கஷ்மிரா மேற்கொண்டு வருகிறார்.

தன்னுடைய வங்கிக் கணக்கில் அரசாங்கம் வழங்கும் வீட்டு எரிவாயுவுக்கான மானியத் தொகை சரியாக வந்து சேர்ந்துவிட்டதா என்பதைச் சரிபார்ப்பதற்காகக் கஷ்மிரா வங்கிக்குச் சென்றார். அப்போது அங்குள்ள வங்கி ஊழியர் ஒருவர், கஷ்மிராவின் கணக்கில் 99 கோடியே 99 லட்சத்து 99 ஆயிரத்து 997 ரூபாய் பணம் இருப்பதாகக் கூற, இதைக் கேட்டதும் அவர் நிலைகுலைந்து அதிர்ச்சியடைந்து போனார்.

உண்மையில் என்னவென்றால், வங்கியின் தரவுக் கணினி அல்லது மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த ராட்சதத் தொகை அவரது கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த வங்கிப் பரிவர்த்தனை நடவடிக்கைகளும் அப்படியே ஸ்தம்பித்துப் போயுள்ளன.

இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, கொல்கத்தாவைச் சேர்ந்த நுபூர் குப்தா என்ற மற்றொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் இதேபோன்று 47 கோடி ரூபாய் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவித்த நிலையில், வங்கி ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் அவரது வீட்டினை முற்றுகையிட அங்கு கடும் பரபரப்பான சூழல் உருவானது.

இத்தகைய பாரிய தொழில்நுட்பத் தவறு எதனால் மற்றும் எப்படி நேர்ந்தது என்பது குறித்து வங்கி அதிகாரிகளும் தொழில்நுட்பக் குழுவினரும் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

A poor woman in West Bengal, India, was left stunned when a technical glitch caused nearly 100 crore rupees to be mistakenly deposited into her bank account, triggering widespread disruption and an official investigation.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்