கொழும்பு குறுந்துவத்தை பகுதியில், மசாஜ் சென்டர் என்ற போர்வையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு இடத்தை பொலிஸார் அதிரடியாக கைபற்றியுள்ளனர்.இந்த அதிரடி சோதனையின் போது, தாய்லாந்தைச் சேர்ந்த 11 பெண்கள் பொலிஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட இந்தப் பெண்கள் அனைவரும் 22 வயதிலிருந்து 48 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸார் இந்த இடத்தை முற்றுகையிட்ட போது, இதன் உரிமையாளர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். தலைமறைவாகியுள்ள அவரைப் பிடிப்பதற்கான முயற்சியில் பொலிஸார்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நபர் ஒருவரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட நுட்பமான நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இந்த தாய்லாந்து பெண்கள் வெறும் ஒரு மாத கால விசாவில் இலங்கைக்கு வந்து, இந்த மசாஜ் நிலையத்திலேயே நிரந்தரமாகத் தங்கியிருந்து இப்படியான மோசமான செயல்களில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இப்படி சட்டவிரோதமாகத் தொழில் செய்து, ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கில் இவர்கள் பணத்தை சம்பாதித்திருக்கிறார்கள்.ஒரு பெண்ணிடம் சேவை பெறுவதற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் 20,000 முதல் 30,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவலும் பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
தற்போது கைதாகியுள்ள 11 தாய்லாந்து பெண்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த பொலிஸார் தயாராகி வருகின்றனர்.