Skip to main content

Super Tamils

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான நடிகர் கவின்…! ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்து மழை.

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் கவின், இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளத்தின் மூலம் தான் பகிர்ந்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கவினுக்கும், மோனிகா டேவிட்டுக்கும் பாடசாலை ஆசிரியையான கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் ஒகஸ்ட் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், தங்களது குடும்பத்தில் இரண்டு புதிய வரவுகள் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள கவின், தனது மனைவி ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

எனினும், குழந்தைகள் மற்றும் மனைவியின் நிழற்படங்களை அவர் வெளியிடவில்லை.

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான கவினுக்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Popular Tamil cinema actor Kavin and his wife Monica David have welcomed twins—a boy and a girl—sharing the joyous news on social media without posting photos, prompting warm wishes from fans and film industry celebrities.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்