Skip to main content

Super Tamils

மின்கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்த நபருக்கு நீதிமன்ற அதிரடி…! CEB-க்கு இழப்பீடு செலுத்த உத்தரவு.

நீதிமன்றம் உத்தரவு: மாத்தறை நபர் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் – குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. ஒரு நபர் குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் குதித்தார்.

இந்த அசம்பாவிதத்தால் திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல, தெனியாய போன்ற பல பகுதிகளுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைப்பட்டது.

காவல்துறையினர் அவரின் குடும்பத்தினரை வரவழைத்த பிறகே, அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்.

உடனே கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தச் செயலால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் கணக்கிட்டு அறிக்கை தருமாறு கம்புருபிட்டிய காவல்துறைக்குத் தலைமை நீதவான் உத்தரவிட்டார்; மேலும் சந்தேகநபரை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலிலும் வைத்தார்.

கடந்த 28 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த வேளையில், மின்வெட்டு காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

விசாரணையின் போது சந்தேகநபர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

A man who climbed a high-tension electricity tower during a family dispute, causing a major power outage in multiple areas and a financial loss of over 201,000 rupees to the Ceylon Electricity Board, has been ordered by the Matara Magistrate’s Court to pay compensation after admitting to the offense.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்