ஈரான் அரசு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது ஈரானிய வணிக கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு.
காஸ்பியன் கடல் பகுதியில் உக்ரைன் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த வர்த்தகக் கப்பல் ஒன்று முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்தச் சோகச் சம்பவத்தில் ஒரு மாலுமி பரிதாபமாக உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயங்களுடன் போராடி வருகிறார்.
இதற்கிடையில், உக்ரைன் படையினரின் இந்தத் துணிச்சலான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கடுமையான வார்னிங் கொடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை தங்களது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ள ஈரான் வெளிவழக்க அமைச்சர் அப்பாஸ் அராக்சி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஐநா சபையின் விதிகளுக்குச் முற்றிலும் முரணான செயல் இதுவென்றும், ஐரோப்பிய நாட்டைப் போருக்குள் சிக்க வைக்க இஸ்ரேல் தான் உக்ரைனைத் தூண்டி விடுகிறது என்றும் அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார். ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது சனிக்கிழமை நடந்த தாக்குதலை உக்ரைன் அதிபரே தனது அறிக்கையில் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஈரான் தரப்பிலிருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் இந்தத் தாக்குதல் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத் தலைவர் காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசி விளக்கமளித்துள்ளதாக அமைச்சர் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
Iran has issued a stern warning to Ukraine after a Ukrainian attack in the Caspian Sea damaged an Iranian commercial ship, causing casualties, with Iranian Foreign Minister Abbas Araghchi accusing Ukraine and Israel of violating international norms.