ஹபரணை அலுத்ஓய பகுதிகளில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஹபரணை மற்றும் அலுத்ஓய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரகசியமாகப் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து பேரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி இரவு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. 50 வயதான அந்த நபருடன், கந்தளாய், அலுத்ஓய மற்றும் இப்படுகம போன்ற பகுதிகளைச் சேர்ந்த 25, 26, 31 மற்றும் 44 வயதுடைய ஏனைய சந்தேகநபர்களும் சிக்கியுள்ளனர்.
ஹபரணை – திருகோணமலை சாலையில் உள்ள யகா வங்குவ பகுதிக்கு அருகில் உள்ள ஒரு காணியிலேயே இந்தச் சட்டவிரோத அகழ்வு வேலைகள் நடைபெற்று வந்துள்ளன. பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் சுமார் 8 அடி ஆழத்திற்கு நிலத்தைத் தோண்டியிருந்தது தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனையின்போது, அகழ்வாராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டிகள், இரும்புத் கம்பிகள் மற்றும் பூஜைப் பொருட்கள் உள்ளிட்ட பல முக்கியப் பொருட்களைப் பொலிஸார் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Five individuals, including the son of a late former government minister, were arrested by police in the Habarana and Alutoya areas while illegally excavating a land in search of antiquities. Police raided the site based on a tip-off on the night of the 20th, seizing excavation tools and ritual items while the suspects were found digging about eight feet deep.