கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் (21) காலை கைது செய்யப்பட்ட இந்தக் குறித்த நான்கு மாணவர்களும் இரவாகியும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் அப்படியே தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்தச் சூழலில் பெற்றோர்களும் உறவினர்களும் தரப்பிலிருந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இவர்கள் தற்போது பிணையில் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் என்ற காரணத்தினாலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பினும், நாளை காலை சரியாக 7:00 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இதற்கான அடுத்த கட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் நாளைய தினம் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த முக்கிய விடயம் உடனடியாக மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் தற்போது மாணவர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Four students who were arrested by Valvettithurai police for not attending school regularly have been released on police bail following pressure from parents and relatives, and after the matter was brought to the attention of the Human Rights Commissioner, with further court proceedings scheduled for the following day.