Skip to main content

Super Tamils

பொருளாதார நெருக்கடி உச்சம்…!தங்கத்தை அடகு வைக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு.

இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி சதவீத அடிப்படையில் இது சுமார் 54 சதவிகித அதிகரிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 660 பில்லியனாக இருந்ததாகவும் பேராசிரியர் கூறியுள்ளார். எனினும், இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, வர்த்தக வங்கிகளிடம் நகைகளை அடமானம் வைத்துப் பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 101.1 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மக்களின் அன்றாட பணத்தேவை அதிகரிப்பிற்கு நாட்டின் பொருளாதார பணவீக்கமே முக்கிய காரணம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், நகைகளை அடமானம் வைத்தல் அல்லது விற்பனை செய்தல் போன்ற காரணங்களால் நாட்டின் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வீடுகளில் நகைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிதி நிறுவன அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

கடும் பணவீக்கம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைச் செலவு காரணமாக, ஏராளமான இலங்கையர்கள் தங்களது தங்க நகைகளை விற்பனை செய்யவும் மற்றும் அடகு வைக்கவும் பெரிதும் தூண்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் விற்கப்பட்ட தங்கத்தின் சரியான அளவு கிலோகிராம் அல்லது பவுண்டுகளில் எவ்வளவு என்பது குறித்து மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், பொருளாதார நெருக்கடியின் போது தங்க அடகு 356 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய சந்தை நிலவரம் மற்றும் ரூபாயின் மதிப்பில் ஏற்படும் தொடர் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, நாட்டில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளதாக அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதற்கிடையில், பொருளாதாரப் பணவீக்கத்தின் தாக்கத்தால், பல்வேறு வகையான கிட்டத்தட்ட பத்து இலட்சம் வாகனங்கள் பல்வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதையும் ஒரு கணக்கெடுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

According to Prof. Wasantha Atukorala, pawning-based loans from commercial banks in Sri Lanka have surged significantly amid rising inflation and high living costs, leading to widespread selling and pledging of gold jewelry and vehicles across the country.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்