Skip to main content

Super Tamils

கொழும்பு-யாழ்ப்பாணம் விரைவு தொடருந்தில் விலை மோசடி…!

 கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி தொடருந்தில் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட குடிநீர் அதிக விலைக்கு விற்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே பயணிக்கும் கடுகதி ரயிலில் உள்ள உணவகத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் திடீர் சோதனை ஒன்றை நடத்தினர். இந்த சோதனையின் போதே நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு தண்ணீர் விற்கப்படுவது தெரியவந்தது.

அனுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து இந்த விசேட அதிரடி சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, பாட்டிலில் 120 ரூபாய் என அச்சிடப்பட்டிருந்த குடிநீரை, பயணிகளுக்கு 150 ரூபாய்க்கு விற்று வந்ததை அதிகாரிகள் கையும் களவுமாக கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பயணிகளிடம் ஏமாற்றி கூடுதல் பணம் வசூலித்த கடை ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The Consumer Affairs Authority conducted a raid on the Colombo-Jaffna express train at the Anuradhapura railway station and discovered that bottled water was being sold at an inflated price of 150 rupees, despite the marked retail price being 120 rupees. Consequently, legal action has been initiated against those responsible for overcharging consumers.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்