நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே வெடித்துள்ள இந்த மோதல் காரணமாக அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) தற்போது சிறைச்சாலைக்குள் அதிரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளுக்குள் ஏன் இந்த மோதல் வெடித்தது என்பதற்கான பின்னணி இன்னும் சரியாகத் தெரியவரவில்லை. இருப்பினும், சிறை வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது பல மடங்கு தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே சற்று நேரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்தில் 16 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே கடுமையான அடிதடி மோதல் ஒன்று நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த திடீர் வன்முறைச் சம்பவத்தில் சுமார் 20 கைதிகள் வரை காயமடைந்திருக்கலாம் என்று தெரியவருகிறது.
சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே இன்று (5) இந்த மோதல் வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை மேலும் மோசமடையாமல் தடுப்பதற்கும், சிறைக்குள் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கும் தகுந்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், காயமடைந்த கைதிகள் அனைவரும் உடனடியாக நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு கைதிகளின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
A violent clash between two inmate groups at the Negombo Prison has resulted in the deaths of two prisoners and left around 20 others injured. Following the unrest, police Special Task Force (STF) personnel were deployed to control the situation and tighten security, while the injured inmates were rushed to the Negombo General Hospital, where two remain in critical condition.