Skip to main content

Super Tamils

நெய்மர் ஓய்வு அறிவிப்பு…! கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி.

FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரின் Round of 16 சுற்றில், நோர்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. இந்த அதிர்ச்சித் தோல்வியைத் தொடர்ந்து, பிரேசில் அணியின் முன்னணி நட்சத்திர வீரரான நெய்மர் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

போட்டியின் தோல்வியால் நிலை குலைந்து, மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நெய்மர், “நான் என் முழு திறமையையும் வெளிப்படுத்த முயன்றேன். கடுமையாகப் போராடிப் பார்த்தேன். இந்த மெட்லைஃப் (Met Life) மைதானத்தில் தொடங்கிய எனது கால்பந்து பயணம், இதோ இதே மைதானத்திலேயே முடிவுக்கு வருகிறது. இப்போது எல்லாமே நிறைவடைந்துவிட்டது” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது 34 வயதாகும் நெய்மர் திடீரென எடுத்துள்ள இந்த ஓய்வு முடிவு, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆழமான சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Following Brazil’s shocking 2-1 defeat against Norway in the FIFA World Cup Round of 16, football superstar Neymar has announced his retirement. Devastated by the loss at the MetLife Stadium, the 34-year-old player emotionally concluded his international career, leaving millions of football fans worldwide in deep shock and sorrow.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்