வெளிநாடுகளைச் சேர்ந்த தகுதியும் திறமையும் வாய்ந்த பணியாளர்களுக்கான எச்-1பி (H-1B) விசாக்களுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணச் சுமையை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் குடிவரவுச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியே, அதிபர் ட்ரம்ப் இந்த புதிய விசா கட்டணத்தை அமல்படுத்தியிருந்தார்.
இந்தச் சூழலில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் எதுவும் பெறாமல் தன்னிச்சையாக விதிக்கப்பட்ட இந்தக் கட்டணம், சட்டத்திற்குப் புறம்பான ஒரு வரி விதிப்புக்குச் சமம் என்று பொஸ்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின் தனது தீர்ப்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் முக்கியப் பணிகளுக்கு பெரிதும் நம்பியிருக்கும் இந்த எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை, கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிபர் ட்ரம்ப் அதிரடியாக உயர்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டண உயர்வுக்கு எதிராக அமெரிக்காவின் 20 மாநிலங்களைச் சேர்ந்த தலைமை சட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். தற்போதைய தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அவர்கள், “அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சர்வதேசத் திறமையாளர்களை முடக்க நினைத்த ட்ரம்பின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் பின்னடைவு இது” எனக் கொண்டாடியுள்ளனர். அதே நேரத்தில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A US Federal Court in Boston has struck down President Donald Trump’s controversial $100,000 fee for new H-1B visas, ruling it an illegal tax imposed without congressional approval. The massive fee hike, introduced in September under the guise of national interest, faced a legal challenge from attorneys general representing 20 states. While critics welcomed the verdict as a victory for international talent and the US economy, the White House has announced its intention to appeal the court’s decision.