Skip to main content

Super Tamils

கோட்டாபயவை அதிரவைத்த சுரேஷ் சலே தகவல்…! 8 மாத சித்திரவதையின் பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடிமையாகவே செயல்பட்டார், சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி போல் அன்றி என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவரான சுரேஷ் சலே மீது, சரத் பொன்சேகா மிகக் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசியுள்ளார். சுரேஷ் சலே செய்த அத்தனை காரியங்களும் கோட்டாபய ராஜபக்சவின் நேரடி அனுமதியோடும் ஆசியோடும்தான் அரங்கேறின என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவோ அனுமதியோ இல்லாமல் சுரேஷ் சலேயால் கழிவறைக்குக் கூட சென்றிருக்க முடியாது என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் உற்று நோக்கினால், இந்தத் கொடூரத் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் முக்கிய மூளையாக கோட்டாபய ராஜபக்ச இருக்கும் பட்சத்தில், சுரேஷ் சலே என்பவர் வெறும் அதன் வால் பகுதி போன்றவர் தான் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாசகாரச் செயல்பாடுகள் குறித்து ஏனைய ராஜபக்ச குடும்பத்தினருக்கும் மிக நன்றாகவே தெரிந்திருந்தது என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவினருடன், சுரேஷ் சலே மிகவும் நெருக்கமான ஒரு தொடர்பைப் பேணி வந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான காலப்பகுதியில், சஹ்ரான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சுரேஷ் சலே மூலமாகவே மாதச் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது என்றும் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார். இந்த அத்தனைப் பணப் பரிமாற்றங்களும் ராஜபக்சர்களின் முழுமையான ஆசிர்வாதத்துடனேயே தடையின்றி இடம்பெற்றன என்பதையும் அவர் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில் என் மீது எந்தவொரு சட்டபூர்வமான வழக்குகளோ அல்லது முறையான குற்றச்சாட்டுகளோ இல்லாத நிலையிலும், என்னை எட்டு மாதங்களாகக் கைது செய்து காவலில் வைத்து சித்திரவதை செய்யுமாறு கோட்டாபய ராஜபக்சவிற்குத் தூபமிட்டு ஆலோசனை வழங்கியது இந்த சுரேஷ் சலே உள்ளிட்ட குழுவினர்தான் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதையும் தாண்டி, பழிவாங்கும் நோக்கில் எனது மனைவி மற்றும் மகள்கள் கூட கடுமையான மன அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என்றும், விமான நிலையத்திற்குச் சென்ற போது கூட அவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மிரட்டப்பட்டனர் என்றும் சரத் பொன்சேகா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Former Army Commander Sarath Fonseka has launched a scathing attack on the detained former intelligence chief Suresh Sallay, labeling him as a mere slave to former President Gotabaya Rajapaksa rather than a professional military officer. Fonseka claimed that Sallay operated under the complete blessing of the Rajapaksas, actively funding Easter Sunday attack mastermind Sahran Hashim’s network, and alleged that Sallay was also the key architect behind the past political victimisation and harassment inflicted upon his own family.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்