Skip to main content

Super Tamils

“ஜனநாயகன்” அப்டேட்…! விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

இயக்குநர் ஹெச். வினோத்தும், தளபதி விஜய்யும் முதன்முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்களுக்கு ஒரு செம மாஸான விருந்தாக ஹெச். வினோத் இதனை உருவாக்கியிருப்பார் என்று கோலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தை, கே.வி.என் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது.

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீசாக வேண்டிய இப்படம், சென்சார் சான்றிதழ் வாங்குவதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக தள்ளிப்போனது. இதற்காக படக்குழுவினர் நீதிமன்றப் படி ஏறியும் எதிர்பார்த்தபடி சான்றிதழ் கிடைக்க தாமதமானதால், வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு ரிவைசிங் கமிட்டிக்குச் சென்றனர்.

ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்துவிட்டு தணிக்கை சான்றிதழ் வழங்கிவிடும் என்று நம்பியிருந்த நேரத்தில், படம் எப்படியோ ஆன்லைனில் லீக்காகி ஒட்டுமொத்த படக்குழுவிற்கும், திரை உலகினருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. அதுமட்டுமில்லாமல், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலும் குறுக்கே வந்ததால் படத்தை அப்போது ரிலீஸ் செய்ய முடியாத ஒரு சூழல் உண்டானது.

இதற்கிடையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய்யின் தவெக கட்சி அமோக வெற்றி பெற்று, தற்போது அவர் ஆட்சியமைத்துள்ளார். தேர்தல் வேலைகள் எல்லாம் ஒருவழியாக முடிந்துவிட்டதால், ‘ஜனநாயகன்’ படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த படத்தின் தயாரிப்பாளரும், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படம் வெளியாகும் என்று கூறி ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சூடான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளமான ‘புக் மை ஷோ’ இணையதளத்தில், இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 22ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அவரது பிறந்தநாள் பரிசாக அன்றைய தினமோ அல்லது அதற்கு சில நாட்களுக்கு முன்போ ‘ஜனநாயகன்’ தியேட்டர்களில் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *