ஈரானிடமிருந்து எண்ணெய் மற்றும் பிற வசதிகளை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், தற்போதைய நெருக்கடியான சூழலில் இலங்கைக்கு எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ஈரான் முன்வந்துள்ளமையை ஒரு சாதகமான நகர்வாக அமைச்சர் பாராட்டியுள்ளார். “கப்பல்களைக் கொண்ட நாடுகள் அத்தகைய வசதியிலிருந்து பயனடைய முடியும். எங்களிடம் கப்பல்கள் இல்லை. ஈரானிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் திறனும் எங்களிடம் இல்லை. தூதுவரின் முன்மொழிவை நாங்கள் வரவேற்கிறோம்.” என்றார்.
இலங்கையுடனான நட்புறவை வலுப்படுத்துவதிலும், ஒரு தோழமை நாடாகத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதிலும் ஈரான் உறுதியாக இருப்பதை இலங்கைக்கான ஈரான் தூதுவர் அண்மையில் மீள உறுதிப்படுத்தியுள் நிலையில். கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில், எண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
Minister Nalinda Jayatissa has stated that Sri Lanka is facing practical difficulties in obtaining oil and other facilities from Iran. The Minister made this announcement at a press conference announcing the cabinet decisions held yesterday.