பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் உறுதிப்படுத்தியுள்ள புதிய குடிவரவு சீர்திருத்தங்களின்படி, அந்நாட்டில் நிரந்தரமாக வசிப்பதற்கான காலவரையற்ற வதிவிட அனுமதி (ILR) பெறும் தகுதிகளில் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறைகள் அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.
முக்கியமாக, திறமையான தொழிலாளர் விசா (Skilled Worker Visa) உள்ளிட்ட பெரும்பாலான பிரிவுகளில், ILR பெறுவதற்கான தகுதிக்காலம் தற்போதுள்ள 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், பராமரிப்புத் தொழிலாளர்கள் போன்ற பட்டப்படிப்பு தகுதிக்கு கீழ் (RQF Level 6) பணிபுரிபவர்கள், நிரந்தர வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிக்க 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட மாற்றங்கள் ஏற்கனவே பிரித்தானியாவில் வசித்து வரும் தொழிலாளர்களுக்கும் பின்னோக்கிப் பொருந்தும் வகையில் அமல்படுத்தப்படலாம் என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுமார் 616,000 பராமரிப்புத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தோரும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அகதி அந்தஸ்து கோருவோருக்கான நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி அகதி அந்தஸ்து என்பது நிரந்தரமான ஒன்றாக வழங்கப்படாது என்றும், அது தற்காலிக பாதுகாப்பு அடிப்படையிலான ஒரு நடைமுறையாக மாற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
__________________________________________________________________________________________________________________________________________
The UK government, under Home Secretary Shabana Mahmood, is set to introduce significant immigration reforms that will double the eligibility period for Indefinite Leave to Remain (ILR) from 5 to 10 years for most skilled workers. Furthermore, lower-level RQF workers may face up to a 15-year wait, and the potential retrospective application of these rules, along with changes to asylum status, has sparked concerns for over 600,000 migrant workers and their families.