வாட்ஸ்அப் குழுவில் ரகசியமாக கைமாறிய கோடிக்கணக்கான யூரோக்கள்…! உலகளாவிய ‘ஹவாலா’ பணப் பரிமாற்ற வலையமைப்பை அம்பலப்படுத்திய பெல்ஜியம்.
ஐரோப்பிய ஒலிபரப்பு நிறுவனங்களின் (EBU) சமீபத்திய புலனாய்வுத் தகவல்கள் படி, வாட்ஸ்அப் (WatsApp) குழு ஒன்று மூலமாக கோடிக்கணக்கான யூரோக்கள் அளவுக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “டிரேடர்ஸ் ஒஃப் கிரேட்டர் ஐரோப்பா” (Traders of Greater Europe) என்ற பெயரில் இயங்கிய, 532 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழுவின் வழியே, எந்த விதமான அதிகாரப்பூர்வ ஆவணப் பதிவுகளுமே இல்லாமல் பல நூறு மில்லியன் யூரோக்கள் ரொக்கமாக உலகம் முழுவதும் கைமாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]