துப்பாக்கி முனையில் தாலி; வைரலாகும் காணொளி
இந்தியாவில் பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், காவல்துறைத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, போதைப்பொருள் கொடுக்கப்பட்ட நிலையில் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பீகாரில் துப்பாக்கி முனையில் மணமகனைக் கடத்தித் திருமணம் செய்து வைக்கும் ‘பகடவா விவா’ எனும் கலாசாரம் நிதிஷ் குமார் என்ற இளைஞருக்கு நேர்ந்துள்ளது. நூலகத்திற்குச் சென்ற இவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று, போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்து, ஒரு கோவிலில் வைத்து வலுக்கட்டாயமாகத் திருமணம் […]