வவுனியா தனியார் தாதியர் கல்லூரி விவகாரம்: பணியாற்றிய 5 பேர் கைது
வவுனியா வைரவபுளியங்குளம் 7ஆம் ஒழுங்கையில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் நேற்று (15.06.2026) பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு பணிபுரிந்து வந்த ஐந்து ஊழியர்களைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறிப்பிட்ட அந்த தனியார் கல்வி நிறுவனத்தில் நர்சிங் படிப்புக்காகப் பல மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இங்கு படிப்பதற்காக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய், தவணை முறையில் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாகப் […]