பிரித்தானியாவில் £111 மில்லியன் யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டை வென்ற அதிர்ஷ்டசாலி.
பிரித்தானியாவில் நடைபெற்ற யூரோமில்லியன்ஸ் லொட்டரி குலுக்கலில் ஒருவரே £111 மில்லியன் பெரும் தொகையை வென்று சாதனை படைத்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற யூரோமில்லியன்ஸ் லொட்டரி குலுக்கலில் பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 111 மில்லியன் பவுண்ஸ் (சுமார் இலங்கை மதிப்பில் பல நூறு கோடி ரூபா) மதிப்பிலான இராட்சத ஜாக்பாட் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார். தேசிய லொட்டரி நிறுவனமான ஆல்வின் (Allwyn) வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டில் பிரித்தானியாவில் வெல்லப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய லொட்டரி பரிசு இதுவாகும். […]