கனடாவில் பயங்கரம்..! தெருவிழாவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி, 5 பேர் காயம்.
கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘Salsa on St. Clair’ தெருவிழாவின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் துப்பாக்கிக் காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஒட்டுமொத்தப் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எனினும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார், இந்தத் தாக்குதலுக்கான […]