சவாரி போன இடத்தில் விபரீதம்…!மயக்க மருந்து கொடுத்து நூதன கொள்ளை.
மட்டக்களப்பு பகுதியில் சவாரிக்குச் செல்வதாகக் கூறி தந்திரமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கடத்திய கும்பல், அதன் ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்த பணம், மொபைல் போன் மற்றும் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளது. நேற்று (28.05.2026) ரிதிதென்னை காட்டுப் பகுதியில் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கிடந்த அந்த ஓட்டுநரை மீட்ட போலீஸார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக வாழைச்சேனை காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 62 வயதான இந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர், வழக்கம்போல […]