வடக்கின் 3 தீவுகள் ‘பசுமை சக்தித் தீவுகள்’ ஆகும்..! ஜனாதிபதி அனுரவின் அதிரடி உத்தரவு.
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய பகுதிகளில் தற்போதுள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை ‘பசுமை சக்தித் தீவுகளாக’ மாற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீவுகளை எரிசக்தி சுதந்திரம் கொண்ட பகுதிகளாக மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எரிசக்தி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். […]