பதுளை வைத்தியசாலை வைத்தியர் திடீர் மாயம்…! கைவிடப்பட்ட நிலையில் கார் மீட்பு பொலிஸார், இராணுவத்தினர் தீவிர தேடுதல்.
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த ஒரு வைத்தியர் திடீரென மாயமாகியுள்ளதாக பொலிஸார் தரப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (23) தனது பணியில் ஈடுபட்டிருந்த அந்த வைத்தியர், அதன் பிறகு திடீரெனக் காணாமல் போயிருப்பதாகப் பொலிஸார் மேலும் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்நிலையில், மாயமான அந்த வைத்தியருக்குச் சொந்தமான கார், மீகஹகியுல பகுதி வழியாக மஹியங்கனையை நோக்கிப் பயணிப்பதை அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, பதுளை – மஹியங்கனை […]