பொரிஸ் ஜோன்சன் பயணித்த தொடருந்தைக் குறிவைத்ததா ரஷ்யா? எல்லை நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் – பயணிகள் உயிர்தப்பினர்!
யஹோடின் (Yahodyn) தொடருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் தொடருந்து இயந்திரம் மீது யுக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகில் ரஷ்யாவின் ஜெட்-இயக்க ஆளில்லா வானூர்தி (jet-propelled drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் ஐரோப்பிய நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த தொடருந்து ஒன்று, அந்தப்பகுதியைக் கடந்த சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பொரிஸ் ஜோன்சன், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் […]