பேராதனை – கொழும்பு ரயில் தடம் புரண்டது…! மலையகப் பாதை போக்குவரத்துத் தடை
பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் ஒன்று இன்று (05) காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் பாதையில் மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்தமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த சம்பவத்தினால் ரயிலின் முன்பகுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மலையகப் பாதையூடான ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.