ஒன்ராறியோவில் விஜய் தணிகாசலத்திற்கு புதிய பொறுப்பு…! முதலாவது AI பயன்பாட்டுத்துறை இணை அமைச்சராக நியமனம்.
ஸ்கார்பரோ–ரூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமக்குக் கிடைத்துள்ள இந்தப் புதிய பொறுப்பு குறித்துப் பேசியுள்ள விஜய் தணிகாசலம், இந்த உயரிய பதவி தனக்கு மிகுந்த பணிவையும் பெருமையையும் தருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்ராறியோ அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து மக்கள் சேவை ஆற்ற நன்னம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர் டக் ஃபோர்டுக்கு அவர் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் உரித்தாக்கியுள்ளார். […]