அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் தட்டம்மை…! பென்சில்வேனியாவில் 40 வயதுப் பெண் பலி – 3-வது உயிரிழப்பு.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை நோய்த்தொற்று காரணமாக 40 வயதுடைய பெண் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். தடுப்பூசி போட்டு எளிதில் தடுத்துவிடக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால், நடப்பாண்டில் அமெரிக்காவில் பதிவாகும் மூன்றாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பென்சில்வேனியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இருவர் தட்டம்மை நோயால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பென்சில்வேனியா மாநிலத்தில் மட்டும் இந்த ஆண்டில் இதுவரை 676 பேருக்குத் தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 124 பேர் […]