வெனிசுவேலா நிலநடுக்கம்…! அர்ஜென்டினா கால்பந்து வீரரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு.
இரட்டை நிலநடுக்கத்தில் வெனிசுவேலாவின் கால்பந்து கிளப்பில் விளையாடும் அர்ஜென்டினா வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பத்தினர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் துயரமான செய்தியை லூகாஸ் ட்ரெஜோவின் நண்பரும் சக கால்பந்து வீரருமான எட்சன் டோர்டோலெரோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. நிலநடுக்கப் பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,719 ஆக […]