ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…! பலர் உயிரிழப்பு.
குமாமோட்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் ஒரு வணிக வளாகத்தில் பலர் சிக்கியுள்ளதாக ஜப்பானின் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் குமாமோட்டோ நகரில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக, அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக ஜப்பானின் தீயணைப்புத் துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வணிக வளாகத்தின் இரண்டாவது தளம் முற்றிலுமாக இடிந்து விழுந்த நிலையில்தான், அதற்குள் பலர் சிக்கிக்கொண்டுள்ளதாக நேரில் கண்டறிந்த சாட்சி […]