பொலன்னறுவை–ஹபரணை வீதியில் கால்வாயில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து…! 20 பேர் மருத்துவமனையில் அனுமதி.
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் 7ஆவது கிலோமீற்றர் பகுதியில் பயணிகள் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பொலன்னறுவை மற்றும் ஹபரணை பிரதான மார்க்கத்தில் அமைந்துள்ள ஏழாவது கிலோமீற்றர் மைல்கல் அருகே, பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி பலத்த காயங்களுக்குள்ளான சுமார் இருபது பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]