22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை…! உயர் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களுடன் களமிறங்கிய இளம் சட்டத்தரணிகள் – சாலிய பீரிஸ் பாராட்டு.
உயர் நீதிமன்றத்தில், அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்றும், நேற்று முன்தினமும் இடம்பெற்றது. இந்த விசாரணைகளின் போது இளம் சட்டத்தரணிகள் பெருமளவில் முன்வந்து கொள்கை ரீதியான வலுவான வாதங்களை முன்வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள அவர், இளம் சட்டத்தரணிகள் இளநிலை சட்ட ஆலோசகர்களாகவும், வழிகாட்டும் சட்டத்தரணிகளாகவும் (Instructing Attorneys) சட்டச் செயல்பாட்டில் […]