‘கஞ்சிபானை இம்ரான்’ விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்…! பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர அறிவிப்பு.
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய புள்ளியான ‘கஞ்சிபானை இம்ரான்’ விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் இந்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். சர்வதேச காவல்துறையின் மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இதுவரை வெற்றிகரமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார். முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சில […]