அராலியில் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்த கிணறுகள்…! நன்னீராக மாறியதுடன் ஒரு கிணற்றில் மிதமான சூடு.
அராலி கிழக்கு, மலையாளங்காடு பகுதியில் அமைந்துள்ள ஐயனார் ஆலய காணியில் இருக்கும் கிணறும், அதனுடன் சேர்ந்து அருகில் இருக்கும் வேறு சில கிணறுகளும் வழக்கத்திற்கு மாறாகத் தண்ணீர் நிறைந்து காணப்படுகின்றன. இந்த அதிசய நிகழ்வு அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஐயனார் ஆலயத்தின் கிணற்று நீர், தரை மட்டத்திற்கும் மேல் பொங்கி வழிந்து வெளியேறிக்கொண்டிருப்பதை நேரில் பார்க்க முடிகிறது. மேலும், அந்த அருகில் உள்ள இன்னொரு கிணற்றில் நீர் மட்டம் சரியாகத் தரை […]