உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரான் மதகுரு கமேனியின் மரணத்திற்குப் பின்னணியில் உள்ள தாக்குதல் திட்டம் குறித்த ரகசியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மிகுந்த பாதுகாப்பிற்கு மத்தியில் ரகசிய இடத்தில் வாழ்ந்து வந்த கமேனியை, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையினர் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்தனர்.
அணு ஆயுத மோதல் காரணமாக ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்த நிலையில், கமேனி கலந்துகொண்ட முக்கியக் கூட்டம் ஒன்றே இத்தாக்குதலுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஈரான் அதிபர் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தை உளவுத்துறை கண்டறிந்ததைத் தொடர்ந்து, ட்ரம்பின் ஒப்புதலுடன் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் கிளம்பி, சரியாக காலை 9:40 மணிக்கு டெஹ்ரானில் கூட்டம் நடந்த இடத்தை ஏவுகணைகள் மூலம் துல்லியமாகத் தாக்கின. இத்தாக்குதலில் கமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதை ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்குப் பழிவாங்குவோம் என ஈரான் எச்சரித்துள்ள நிலையில், பதிலடி கடுமையாக இருக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். தற்போது போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஒன்பது கடற்படைக் கப்பல்களைத் தாக்கி அழித்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
______________________________________________________________________________________________________________________________________
The killing of Iran’s supreme leader Khamenei in a joint US-Israeli airstrike has caused global upheaval, with detailed reports emerging on the intelligence-driven operation targeting a high-level meeting in Tehran. While Iran threatens revenge, President Trump has warned of severe consequences and confirmed the destruction of nine Iranian naval vessels as tensions escalate drastically in the Middle East.